News May 7, 2025

ராசி பலன்கள் (02.05.2025)

image

➤மேஷம் – உதவி ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – சுபம் ➤சிம்மம் – அசதி ➤கன்னி – பாசம் ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – தனம் ➤தனுசு – பக்தி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நட்பு ➤மீனம் – நலம்.

Similar News

News October 17, 2025

வயிற்று பிரச்னையை விரட்டும் பூண்டு கஞ்சி!

image

வாயு தொல்லை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு கஞ்சி அருமருந்தாகும். ஒரு குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி மிளகு வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, அதில் அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி சுமார் 6-7 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கிளறினால் கஞ்சி ரெடி.

News October 17, 2025

மீனவர்கள் நலன்: இலங்கை PM-யிடம் பேசிய PM மோடி!

image

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை, PM மோடி இன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

image

இப்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பின்னர் 30 முதல் 35% வரை குறையும் என்கிறார் முதலீட்டு நிபுணர் அமித் கோயல். வரலாற்றில் 2 முறை மட்டுமே தங்கம் விலை இம்மாதிரி உச்சம் தொட்டதாகவும். அதன்பின் பெரும் சரிவு கண்டதாகவும் கூறும் அவர், இம்முறையும் உச்சம் தொட்டு, பின் 1 சவரன் ₹62,161 வரையும், வெள்ளி 1 கிலோ ₹77,450 வரையும் குறையும் எனக் கணித்துள்ளார். ஆகவே தங்கம் வாங்க அவசரப்பட வேண்டாம் என்கிறார்.

error: Content is protected !!