News April 9, 2025
நீட் விலக்கு பெறும் நம்பிக்கை வந்திருக்கிறது: முதல்வர்

மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்குகிறது: அகிலேஷ்

அருணாச்சல் தங்களது பகுதி என <<18374689>>சீனா<<>> கூறிவரும் நிலையில், இந்தியாவின் எல்லைகள் குறித்து அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் அசல் மற்றும் தற்போதைய எல்லையை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்கி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், எல்லைகளை காப்பதை விடுத்து, போலி செய்திகள், பிரசாரங்களை அரசாங்கம் நம்பியிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News November 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 27, கார்த்திகை 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம் ▶சிறப்பு: தென்னை, மா, பலா, புளி வைக்க நல்ல நாள். ▶வழிபாடு: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்.
News November 27, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துகிறதா இந்தியா?

<<18371900>>ஷேக் ஹசீனாவை<<>> நாடு கடத்துவது தொடர்பாக, வங்கதேசத்தின் கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதி விவகாரங்கள், சட்ட செயல்முறைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளது. மேலும், வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மேம்பட இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


