News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.
Similar News
News September 24, 2025
தவெக – காங்கிரஸ் கூட்டணியா? செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சி கூடுதல் சீட்டுகள் கேட்பதால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் ஏற்படாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தவெக உடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் மறைமுகமாக எதுவும் பேசவில்லை எனவும், இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதிக்க கொடுத்தால் தான் அவர் என்ன பேசுகிறார் என தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.
News September 24, 2025
H-1B விசா கட்டணத்தில் டாக்டர்களுக்கு விதிவிலக்கா?

அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. விசா கட்டண உயர்வால் அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்த நிலையில், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
News September 24, 2025
டி – ஷர்ட்டின் கதை தெரியுமா?

மற்ற ஆடைகளை விட பலருக்கும் சௌகரியமாகவும், ஸ்டெயிலாகவும் இருப்பது டி – ஷர்ட்தான். ஆனால் முதலில் இதை விளையாட்டு வீரர்களுக்காகவே அறிமுகமானது. ஆனால் வெயில் காலத்தில் டி-ஷர்ட் அணிவது நன்றாக இருந்ததால், 1950-களில் இது மக்களின் விருப்ப ஆடையாக மாறியது. டி- ஷர்ட்டில் உள்ள T-க்கு என்ன அர்த்தம் என யோசித்தது உண்டா?
தரையில் அதை விரித்தால் T என்னும் எழுத்தின் தோற்றம் வருவதால் T- Shirt என அழைக்கப்படுகிறது.