News April 13, 2024
ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பொழுதுபோக்கு துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பலர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
Similar News
News December 10, 2025
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
News December 10, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $28.27 உயர்ந்து, $4,217.15-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.9) மட்டும் சவரனுக்கு ₹320 குறைந்து, ₹96,000-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
IND vs SA முதல் T20: வரிசைக்கட்டிய ரெக்கார்டுகள்!

☆சர்வதேச T20-ல் குறைந்த வயதில் 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை திலக் வர்மா(23 வயது 31 நாள்கள்) பெற்றுள்ளார் ☆சர்வதேச T20-ல் 100 சிக்ஸர்களை அடித்த 4-வது இந்தியராகியுள்ளார் ஹர்திக்(100 சிக்ஸர்கள்). ரோஹித்(205), SKY(155), கோலி(124) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர் ☆சர்வதேச T20-ல் SA-ன் குறைவான ஸ்கோர் இது(74 ரன்கள்). 2022-ல் IND-க்கு எதிராக 87 ரன்களில் சுருண்டதே முந்தைய மோசமான ஸ்கோர்.


