News April 7, 2025
முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
கலர்புல்லாக மாறப்போகும் வேட்பாளர்களின் போட்டோஸ்

பிஹார் சட்டமன்ற தேர்தல் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோஸ் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இனி வரும் எல்லா மாநில தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாம். இதனால் வாக்களிக்கும்போது வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் இருக்காது என ECI தெரிவித்துள்ளது.
News September 18, 2025
தமிழக அரசுக்கு CPM எச்சரிக்கை

தமிழக அரசு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால், அதை எதிர்த்து போராடுவதை தவிர வேறுவழியில்லை என CPM பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை குறிப்பிட்ட அவர், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொடுமையான சுரண்டல் ஒப்பந்த முறை தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.