News August 6, 2025
ஆணவக் கொலை.. 8 வாரங்களில் விசாரிக்க உத்தரவு

கவின் ஆணவக்கொலை வழக்கை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய CBCID-க்கு மதுரை HC உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க கோரி HC-யில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.
Similar News
News August 6, 2025
அடுத்தடுத்து கட்சி மாறிய மன்னன் குடும்ப வாரிசுகள்!

கடந்த வாரம் EPS முன்னிலையில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமான நிலையில், இன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் 1967 முதலே கார்த்திக் தொண்டைமானின் குடும்பம் அரசியல் வலிமை கொண்டது என்பதால், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனப்படுகிறது. உங்கள் கருத்து?
News August 6, 2025
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்

ஒருகாலத்தில் சாக்லெட் பாய் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். பின்னர் படவாய்ப்புகள் குறையவே, சில விளம்பரங்களில் மட்டுமே அப்பாஸை பார்க்க முடிந்தது. நியூசிலாந்தில் செட்டிலான அப்பாஸ் இப்போ மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அறிமுக இயக்குநர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கும் படத்தில் அப்பாஸுடன், ஜி.வி. பிரகாஷ், கௌரி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். உங்களுக்கு பிடித்த அப்பாஸ் படம் எது?
News August 6, 2025
LGBTQIA திருமணங்களை அரசு அனுமதிக்கணும்: ஐகோர்ட்

ஒரே பாலித்தனவர்கள், திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தமிழக அரசு தகுந்த உத்தரவிட சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்தான வழக்கின் தீர்ப்பில், கல்வி & வேலைவாய்ப்புகளிலும் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.