News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
Similar News
News March 10, 2025
BREAKING: X தளம் மீண்டும் முடங்கியது

உலகம் முழுவதும் X தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி பேர் பயன்படுத்தும் குறுஞ்செய்தி தளமான X, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வருகிறது. இன்று மதியம் அது சில நிமிடங்கள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் முடங்கியிருக்கிறது. செய்தி பரிமாற்றத்தின் முக்கிய தளமாக இருக்கும் X முடங்கியிருப்பது தகவல் பரிமாற்றத்தை பாதித்துள்ளது.
News March 10, 2025
கப் ஜெயித்த IND அணிக்கு ₹20 கோடி பரிசு

CT கோப்பையை வென்ற IND அணிக்கு ₹20 கோடியை ICC பரிசாக வழங்கியுள்ளது. அதேபோல், ரன்னரான NZக்கு ₹9.72 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு பெற்று தந்த காரணத்தால், இந்திய அணி வீரர்களுக்கு BCCI பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த CT ஃபைனலில் NZஐ 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் IND வீழ்த்தியது.
News March 10, 2025
இரட்டை வேடம் போடும் திமுக : தவெக தாக்கு

மதுரையில் மத நல்லிணக்க பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது எந்த வகையில் நியாயம் என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதி மறுத்ததன் மூலம் மத நல்லிணக்கம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பாஜக மீதான தனது மறைமுக பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளது. மேலும், கொஞ்சம், கொஞ்சமாக திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கி உள்ளதாக கடுமையாக சாடியுள்ளது.