News January 29, 2025

இ-பைக் தொழிற்சாலை அமைக்கும் ஹோண்டா

image

இந்தியாவில் 2028 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை அமைக்க ஹோண்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக 29 வகையிலான பைக்குகளை உற்பத்தி செய்யவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 100 சிசி பைக்குகளுக்கு நிகராக 4kWh திறன் கொண்ட பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 30, 2025

காஞ்சிபுரம்: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1.543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்., 17-க்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பொம்மையுடன் கல்யாணம்.. 3வது குழந்தையும் பெற்ற நபர்!

image

நம்மை சுற்றி இவரை போன்ற பல விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். கொலம்பியாவை சேர்ந்த கிரிஸ்டியன் என்பவர் நடாலியா என்ற பொம்மையை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, 3 பொம்மை குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளார். அவர் மனநிலை பாதிப்புள்ளவர் என பலர் விமர்சிக்கும் நிலையில், ஒரு பொருள் மீது அதீத காதல் வரும் ‘Objectophilia’ என்ற நிலை இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

News August 30, 2025

BREAKING: செப்டம்பர் முதல் ₹2,500.. CM ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கு கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். SHARE IT.

error: Content is protected !!