News May 3, 2024
ஹீரோவை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா

இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ஹீரோ நிறுவனத்தை, ஹோண்டா பின்னுக்கு தள்ளியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ஹீரோ ஒட்டுமொத்தமாக 5,33,585 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், ஹோண்டா நிறுவனம் 5,41,946 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 45% அதிகமாகும்.
Similar News
News January 12, 2026
4 நாள்கள் பொங்கல் விடுமுறை!

பொதுவாக ஜனவரியில் பள்ளிகளை போலவே வங்கிகளுக்கும் பல நாள்கள் விடுமுறை உள்ளது. இதில் எத்தனை நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதில் சிலருக்கு குழப்பம் நிலவுகிறது. அந்த வகையில் ஜன.15, 16, 17 ஆகிய நாள்களை அடுத்து 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியில் முக்கிய வேலையை முடிக்க செல்பவர்கள், மேற்கூறிய விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வேலைகளை திட்டமிடுவது நல்லது.
News January 12, 2026
காங்., துரோகத்தை ‘பராசக்தி’ காட்டியுள்ளது: அண்ணாமலை

‘பராசக்தி’ அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் பேட்டியளித்த அவர், காங்கிரஸை பற்றி தெரிந்துகொள்ள இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். காங்., கட்சி செய்த துரோகத்தை ‘பராசக்தி’ படம் காட்டியுள்ளதாகவும், இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 12, 2026
BREAKING: கூட்டணி முடிவு.. ராமதாஸ் புதிய அறிவிப்பு

NDA-வில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக <<18830863>>அமைச்சர் ராஜகண்ணப்பன்<<>> பேசிய விவகாரத்தை நேரடியாக மறுக்கவில்லை. அதேநேரம், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என சூசகமாக பதிலளித்துள்ளார். அன்புமணியை போல் ராமதாஸும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.


