News February 16, 2025
தன்பாலின ஈர்ப்பாளரான மதகுரு சுட்டுக் கொலை

தென்னாப்பிரிக்காவில் இஸ்லாமிய மதகுரு முஹ்சின் ஹெண்ட்ரிக்ஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னை Gay என வெளிப்படையாக அறிவித்த முதல் மதகுருவான இவர், LGBTQவினருக்கும் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கும் அடைக்கலம் அளித்து வந்தார். இமாம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த கொலைக்கு சர்வதேச LGBTQ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Similar News
News November 20, 2025
படத்தின் பெயரை கட்சிக்கு வைத்தாரா மல்லை சத்யா?

தான் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ’திராவிட வெற்றிக் கழகம்’ என பெயர் வைத்துள்ளார் மல்லை சத்யா. இந்த பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என சற்று ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் அபிராமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கொடியை டிகோட் செய்த நெட்டிசன்கள், ‘இதையா 15 நாள்களாக குழு அமைத்து முடிவு செய்தார்’ என கமெண்ட் அடிக்கின்றனர்.
News November 20, 2025
கொளுத்தி போட்ட சசி தரூர்.. காங்கிரஸில் சலசலப்பு

PM மோடியின் பொருளாதார, கலாச்சார சிந்தனைகளை காங்கிரஸ் MP சசிதரூர் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை விட, இன்னொரு கட்சியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது என நினைத்தால், அவர் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என காங்கிரஸ் MP சந்தீப் தீக்ஷித் கேள்வியெழுப்பியுள்ளார்.
News November 20, 2025
ALERT: 5 நாள்களுக்கு இங்கெல்லாம் கனமழை

தென் தமிழகம் மற்றும் காவிரி படுகையில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை தொடர்கிறது. நாளை(நவ.21) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்கள் மக்களே..!


