News March 14, 2025
ஆணவக்கொலை: மகளை தீர்த்துக்கட்டிய கொடூர தந்தை

உ.பி. நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் நேஹா, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூக இளைஞரை மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துள்ளார். மறுநாளே நேஹாவை நைசாக பேசி அவரது தந்தை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை, தன் மகனுடன் சேர்ந்து தந்தை கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மகளின் உயிரைவிட கௌரவம் பெரியதா என்ன?
Similar News
News March 14, 2025
சென்னை குடிநீருக்காக புதிய நீர்த்தேக்கம்!

சென்னை அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 6 ஆவது நீர்த்தேக்கமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். மாமல்லபுரம், செங்கல்பட்டு இடையே ₹360 கோடியில் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படும் என்றும், உபரி வெள்ளநீர் இதில் சேமிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 14, 2025
விடியல் பயணத் திட்டத்தால் இவ்வளவு சேமிப்பா?

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை உறுதி செய்து வரும் ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40% முதல் 60% வரை உயர்ந்துள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தால் பெண்கள் மாதம் ரூ.888 சேமிக்க முடிவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
8 மாவட்டங்களில் புதிய அரசுக் கலைக் கல்லூரிகள்

சென்னை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழங்குடி மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அரசு யுனிவர்சிட்டிகளுக்கு ₹700 கோடியும், அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையத்திற்கு ₹50 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.