News November 15, 2024

ஊர்க்காவல் படையினர் உயிரிழப்பு: இழப்பீடு அதிகரிப்பு

image

ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பணியின்போது உயிரிழக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.15,000இல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கான தொகை ரூ.10,000இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News March 1, 2026

CINEMA 360: நாளை சூர்யா 46 ட்ரீட்

image

சூர்யாவின் 46-வது படத்தின் பர்ஸ்ட் லுக் & டைட்டில் நாளை காலை 10:18 மணிக்கு வெளியாகவுள்ளது *‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது *பெரும் வெற்றி பெற்ற ‘With love’ படம் வரும் 6-ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது *கடந்த 27-ம் தேதி ரீ-ரிலீசான விஜய்யின் ‘தெறி’ இரண்டு நாள்களில் வெறும் ₹90 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளதாம்.

News March 1, 2026

3 நாள்கள்.. அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை

image

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

News March 1, 2026

திமுக -காங் இருவரும் ஊழல்வாதிகள்: PM மோடி

image

முந்தைய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என PM மோடி பேசியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், புதுச்சேரியை டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்துக்கான ஏடிஎம் போலவே காங்., கருதியதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் பல ஊழல்களையும், குற்றச் சம்பவங்களையும் செய்ததாகவும், அவர்கள் புதுச்சேரியில் ஆட்சியமைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!