News March 26, 2025
திருஷ்டி தோஷம் போக்கும் திருநீறு

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், குடும்ப நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டாம். ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News March 27, 2025
10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை!

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 27, 2025
எப்படி இருக்கிறது ‘L2: எம்புரான்’? Review & Rating!

குரோஷி ஆப்ரகாமின் கதையை சொல்கிறது ‘L2: எம்புரான்’. பிளஸ்: மோகன்லால் அசத்தி இருக்கிறார். இன்டர்வெல் காட்சி, இரண்டாம் பாதியின் அரசியல் மற்றும் காட்டில் நடக்கும் ஆக்ஷன் பிளாக்கிற்கு பயங்கர கிளாப்ஸ். மேக்கிங் தரமாக உள்ளது. மியூசிக், ஒளிப்பதிவு இரண்டுமே பலம். பிருத்விராஜ் ஸ்டைலிஷான படம் கொடுத்துள்ளார். மைனஸ்: படத்தின் நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. மெதுவான முதல் பாதி காட்சிகள் சோதிக்கின்றன. Rating: 3/5.
News March 27, 2025
டி20யில் அபார வெற்றி.. ODI கேப்டனாகும் பிரேஸ்வெல்

ரச்சின், கான்வே, போல்ட் போன்ற முன்னணி வீரர்கள் IPL தொடரில் விளையாடி வருகின்றனர். ஆனால் அடுத்த நிலை வீரர்களை வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து விளையாடி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. பிரேஸ்வெல் தலைமையிலான அணி டி20 தொடரை 4 – 1 என வென்றது. காயம் காரணமாக ODI தொடரில் இருந்து கேப்டன் டாம் லாதம் விலகிய நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.