News March 7, 2025
ஹாலிவுட் நடிகை பமீலா தற்கொலை

‘பே வாட்ச்’ நடிகை பமீலா பாச் (62) தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த புதன் அன்று சடலமாகக் கிடந்தார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பமீலா, பிரபல நடிகர் ஹேசல்ஹோஃப்பை 1989இல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 மகள்கள் உள்ள நிலையில், 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். ஹேசல்ஹோஃப் கொடுமைப்படுத்தியதாக பமீலா தெரிவித்திருந்தார்.
Similar News
News March 9, 2025
சிக்கன் விலை தெரியுமா?

நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
News March 9, 2025
சிரியாவில் சண்டை தீவிரம்: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 9, 2025
அம்பையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டம், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பறவைகளை ஆர்வமுடன் கணக்கெடுத்து வருகின்றனர்.