News November 29, 2024
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த். மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலத்திற்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
Similar News
News December 29, 2025
நீரிழிவு நோயா? இந்த பழங்களை சாப்பிடுங்க!

நீரிழிவு நோயாளிகள் பழங்களை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், Low GI (Low Glycemic Index) கொண்ட, அதாவது ரத்த சர்க்கரையை குறைந்த அளவில் உயர்த்தும், அதிக நார்ச்சத்து உள்ள பழங்கள் சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அத்தகைய பழங்கள் என்னென்ன என்பதை அறிய மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிந்த வேறு பழம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News December 29, 2025
நான் சாதிக்கு எதிரானவன்: மாரி செல்வராஜ்

சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசி கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் விசிலடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். அப்போது, இந்த கொண்டாட்டங்கள் அனைத்துமே சாதிக்கு எதிரானதாக இருந்தால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று மாரி கூறினார். எதிர்காலத்தில், ஒருவேளை அரசியல் கட்சி (அ) அமைப்பை தொடங்கினாலும் தான் என்றைக்கும் சாதிக்கு எதிராகவே செயல்படுவேன் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
News December 29, 2025
தங்கம், வெள்ளி சரிவு.. விலை ₹4,000 குறைந்தது

<<18700210>>தங்கம் விலை<<>> இன்று(டிச.29) சவரனுக்கு ₹640 குறைந்த நிலையில், வெள்ளியும் கிராமுக்கு ₹4 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் வெள்ளி 1 கிராம் ₹281-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹4,000 குறைந்து ₹2,81,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) வெள்ளியின் விலை 1.10 டாலர்கள் சரிந்ததால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


