News March 17, 2024
மது கடைகளுக்கு விடுமுறை

திருவாரூரில் உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவில் தேர் திருவிழா மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் ஒருநாள் விடுமுறை என கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 3, 2026
திருவாரூர்: போலீஸ் வேன்- பைக் மோதி விபத்து

திருவாரூர் போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் ஷியாமநாதன் (28). இவர் ஆயுதப்படை வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று கொரடாச்சேரி அருகே இவர் ஓட்டி வந்த வேனும், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திவாகர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 3, 2026
திருவாரூர்: கறிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து

கொரடாச்சேரி அடுத்த வெண்ணவாசலைச் சேர்ந்தவர் காதர் மைதீன் (32). கறிக்கடை வைத்துள்ள இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரரான ஷேக் தாவூது என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஷேக் தாவூதுக்கு ஆதரவாக முகமது மைதீன், பிரபு ஆகியோர் காதர் மைதீனிடம் தகராறு செய்து பேனா கத்தியால் அவரை குத்தி கிழித்துள்ளனர். கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
News February 3, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


