News April 16, 2024
விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
அரசியலமைப்பின் கையெழுத்து பிரதி இருப்பது தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கையெழுத்து பிரதி இன்றும் பாதுகாக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாடாளுமன்றத்தில், நைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட கண்ணாடி குமிழில் அது பாதுகாக்கப்படுகிறது. அரசியலமைப்பு கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளதால், அது விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும். எனவே அதை தடுக்கவும், சூரிய ஒளி மற்றும் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்கவும் நைட்ரஜன் வாயு கொண்டு பராமரிக்கப்படுகிறது.
News November 26, 2025
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இந்நாளில் அதன் மாண்பையும், அது வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார். இதுபற்றி X-ல் அவர், தவெகவின் கொள்கை தலைவர் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகிலேயே சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி மக்களுக்கு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அரசியலமைப்பானது, வேற்றுமையில் ஒற்றுமை காண வழிவகை செய்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
News November 26, 2025
2-வது திருமணம்.. நடிகை மீனா முடிவை அறிவித்தார்

2-வது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என நடிகை மீனா அறிவித்துள்ளார். 2022-ல் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு, மகளுடன் தனியாக வசித்து வரும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீனா, நடிகர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்ய உள்ளதாக பேசப்பட்டது. அதனை மறுத்துள்ள அவர், சிலர் ஏன் எனது 2-வது திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் எனப் புரியவில்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


