News April 7, 2025

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசியில் இன்று விடுமுறை

image

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் இன்று(ஏப்.7) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும். SHARE IT

Similar News

News April 9, 2025

SBI ஏடிஎம்களில் இவர்களுக்கு கட்டணமில்லை.. இலவசம்

image

SBI வங்கி ஏடிஎம் கட்டண விதிகளை பிப்.1 முதல் மாற்றியமைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த விதியின்படி, SBI ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் 5 முறை SBI ஏடிஎம்களிலும், 10 முறை பிற ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். அதேநேரத்தில் சேமிப்பு கணக்கில் சராசரியாக ரூ.1 லட்சம் வைத்திருப்போருக்கு SBI மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் பரிவர்த்தனை அன்லிமிடெட் இலவசமாகும். கட்டணம் வசூலிக்கப்படாது. SHARE IT

News April 9, 2025

ரஷ்யாவின் வெற்றி விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு

image

ரஷ்யாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். 2ஆம் உலகப் போரில் வெற்றி வாகை சூடியதை ஆண்டுதோறும் மே 9 ஆம் தேதி ரஷ்யா கொண்டாடி வருகிறது. 80 ஆம் ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2025

குமரி அனந்தனின் நிறைவேறாத ஆசைகள்

image

நதிநீர் இணைப்பு, மது ஒழிப்பு ஆகியவை குமரி அனந்தனின் நீண்டநாள் கோரிக்கைகள். இதற்காக குமரி-சென்னைக்கு பல முறை அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பேசும்போதும் தனது விருப்பத்தை அவர் முன்வைக்க தவறியதே இல்லை. ஆனால் அவரது ஆசைகள் கடைசி வரை நிறைவேறவே இல்லை. குமரி அனந்தன் மறைந்தாலும், அவர் மேற்கொண்ட பாத யாத்திரைகள் என்றும் தமிழக வரலாற்றில் அவருக்கு புகழை பெற்றுத் தரும்.

error: Content is protected !!