News August 10, 2024
விடுமுறை: அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு

விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உருவாக்கியுள்ள களஞ்சியம் செயலியை, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, இனி விடுமுறை, சம்பள முன்பணத்துக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
உடல் உறுப்புகளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க
News October 27, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா டிடிவி?

EPS-தான் ஒரே எதிரி என்ற மோடில் இயங்கிக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். இதனால்தான் NDA கூட்டணி வேண்டாமென இருக்கிறார். அத்துடன் விஜய்யும் EPS உடன் சேரக்கூடாது என கூறி வருகிறார். ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், டிடிவி அடுத்து செல்லும் இடம் திமுகதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காகவே கரூர் மேட்டரில் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளை அவர் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
News October 27, 2025
புயல் அலர்ட்: 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.


