News March 3, 2025
நாளை 5 மாவட்டங்களில் விடுமுறை

நாளை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி குமரி மாவட்டங்களுக்கும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும், பொதுத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.
Similar News
News March 4, 2025
டிரம்ப் அவமானப்படுத்திய பிறகும் ஜெலன்ஸ்கி உறுதி

டிரம்ப் நிர்வாகத்துடன் சுமூகமான உறவை பேண முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். USA எதிர்பார்க்கும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அந்நாட்டு வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது கடினம் என்பதால், தன்னை பதவியில் இருந்து நீக்குவதும் கடினம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
இன்றைய (மார்ச்.04) நல்ல நேரம்

▶மார்ச்- 04 ▶மாசி – 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 08:30 AM – 09:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM- 01:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: அஸ்தம் ▶நட்சத்திரம் : அசுவினி.
News March 4, 2025
ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொலை வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜி மற்றும் தஞ்சை எஸ்.பி.யை நியமித்து உத்தரவிட்டனர்.