News December 13, 2024
14 மாவட்டங்களில் இன்று விடுமுறை

கனமழை எதிரொலியால் தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
Similar News
News September 14, 2025
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழக்கங்கள் என்ன?

சரியான உணவை சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சாப்பிட்ட பிறகு சரியான பழக்கங்களை கடைப்பிடிப்பதும் முக்கியம். பல நேரங்களில் மக்கள் உணவு சாப்பிட்ட உடனேயே சில தவறுகளைச் செய்கிறார்கள், இது படிப்படியாக செரிமானத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சாப்பிட்டவுடன் என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்..
News September 14, 2025
அடுத்தடுத்து விக்கெட்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. ஹர்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சைம் அயுப் கேட்ச்சாகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து, 2-வது ஓவரை பும்ரா வீசினார். அதில், முகமது ஹாரிஸ் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனால், பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே பரிதாபமாக அமைந்துள்ளது.
News September 14, 2025
உங்கள் செல்போனை ஆப் செய்யுங்கள்

வாரம் ஒருமுறை, உங்கள் செல்போனை ஸ்விட்ச்-ஆப் செய்வது பல்வேறு நன்மைகளை தரும் என்கின்றனர் tech experts. ஆம், சில நிமிடங்கள் உங்கள் போனை ஆப் செய்து வைத்தால்: *போன் ஹேக் செய்யப்படுவதை, தகவல்கள் திருடப்படுவதை தடுக்க உதவும். *பேட்டரி ஆயுள் கூடும் *மெமரி லீக் கட்டுப்படும் *கனெக்டிவிடி பிரச்னைகள் சீராகும் *கேஷ் மெமரி அழிவதால் ஸ்பீட் அதிகரிக்கும் *சில நிமிடங்கள் மனநிம்மதி கிடைக்கும். SHARE IT!