News March 25, 2024
நாளை முதல் விடுமுறை

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளன. அனைத்து வகுப்பினருக்கான தேர்வுகளையும் தேர்தலுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தவெகவில் இணைந்த 2 அதிமுக தலைவர்கள்.. EPS அதிர்ச்சி

அதிமுக தலைவர்களை தவெகவில் இணைப்பதற்கு செங்கோட்டையன் முனைப்பு காட்டி வருகிறார். <<18702565>>Ex MLA-க்களான சி.கிருஷ்ணன், மரியமுல் ஆசியா<<>> ஆகியோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பொங்கலுக்கு முன் அதிமுகவின் பல Ex அமைச்சர்கள் தங்கள் கட்சியில் இணையவிருப்பதாக செங்கோட்டையன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதனால், அதிமுகவிற்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 30, 2025
சூப்பரான மார்கழி புள்ளி கோலங்கள்!

நடக்கும் போது நம் காலடிபட்டு சிறு உயிரினங்கள் இறக்கின்றன. இதுவும் ஒருவகை பாவம் என்பதால் தோஷம் ஏற்பட்டு கன்னிப் பெண்களுக்கு திருமண தடை நீடிப்பதாக நம்பப்படுகிறது. இதை தவிர்க்கவே அரிசி மாவில் கோலமிடும் பழக்கம் தொடங்கப்பட்டது. அந்த அரிசி மாவினை சிறு உயிரினங்கள் உண்ணும் போது தோஷம் அகலும் என கூறப்படுகிறது. அந்தவகையில், சில மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்க்கவும்.
News December 30, 2025
இன்று 5-வது டி20: இந்தியா Vs இலங்கை

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான கடைசி டி20 இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தொடரை 4-0 என்ற கணக்கில் வசப்படுத்தியுள்ள IND, இந்த போட்டியிலும் வென்று SL-ஐ ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் படுதோல்வி கண்ட SL, 4-வது டி20-ல் 222 ரன்களை துரத்தும் முயற்சியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது. எனவே, 5-வது டி20-ல் ஆறுதல் வெற்றிபெற அந்த அணி போராடும்.


