News September 27, 2025
இன்று முதல் விடுமுறை..

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News January 15, 2026
விருதுநகர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <
News January 15, 2026
BIG BREAKING: ஜன நாயகன்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரிக்க SC மறுத்துள்ளது. U/A சான்றிதழ் வழங்கக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, படக்குழு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த SC, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஜன.20-ம் தேதி சென்சார் விவகாரத்தில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.
News January 15, 2026
2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

➤https://sarathi.parivahan.gov.in/ -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.


