News October 30, 2025
நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நாளை(அக்.31) தொடங்குகிறது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 2 நாள்கள் அரசு சார்பில் இவ்விழா நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி நாளை மறுதினம்(நவ.1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 30, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அதிமுக Ex கோவை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், Ex மாநகராட்சி கவுன்சிலருமான சொக்கம்புதூர் செந்தில் திமுகவில் இணைந்தார். கோவையில், Ex அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் செந்திலின் ஆதரவாளர்கள் சிலரும் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவையில், 2026 தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்ய, அக்கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கும் படலம் தொடர்ந்து வருகிறது.
News October 30, 2025
தூங்கும் முன்பாக செய்யக்கூடாத 5 தவறுகள்

நாள் முழுவதும் அயராது உழைத்த பிறகு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தூங்க செல்லும் முன்பாக சில தவறுகளை செய்வதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. தூங்க செல்லும் முன்பாக செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்த்து நண்பர்களுக்கும் தவறாமல் பகிரவும்.
News October 30, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹90,600-க்கு விற்பனையான நிலையில், இன்று(அக்.30) ₹200 குறைந்துள்ளது. இன்றைய தினம் காலையில் சவரனுக்கு ₹1,800 குறைந்தது, ஆனால் மாலையில் மீண்டும் ₹1,600 அதிகரித்தது. ஆனாலும் கூட நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 22 கேரட் கிராமுக்கு ₹25, சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


