News August 5, 2025
நீலகிரி, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 5, 2025
கேப்டன் கில்.. எவ்வளோ மார்க் கொடுப்பீங்க?

ENG டெஸ்ட் தொடர் நடந்து முடிந்து விட்ட நிலையில், இதில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சீனியர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். 3 முறை 100+ ரன்கள், ஒரு 250+ ரன்கள் என ரன்குவிப்பில் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை முறியடித்த கில், கேப்டனாகவும் களத்தில் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். ENG தொடரில் அவரின் பெர்பார்மென்ஸை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
News August 5, 2025
எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.
News August 5, 2025
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.67ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமனிய மக்களை கடுமையாக பாதிக்கும்.