News October 14, 2024
கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) செவ்வாய்க்கிழமை விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆக.11) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்’’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
News August 11, 2025
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று பேசுகையில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News August 11, 2025
கடலூர்: சொந்த ஊரில் அரசு வேலை

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10th தேர்ச்சி பெற்றவர்கள் <