News October 21, 2025
விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
IPL : பஞ்சாப் பவுலிங்

PBKS-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற KKR பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய KKR, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்துக்கு நகரும் வியூகத்துடன் PBKS களம்காணுகிறது. போட்டியில் 90% மழை பாதிப்பு ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 6, 2026
மகளிர் உரிமைத் தொகை.. வழக்கில் தமிழக அரசு அப்டேட்

1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது விசாரணைக்கு வந்தபோது, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மனுதாரர்களின் கோரிக்கை மே 4-ம் தேதிக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதன்பின், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
KKR Vs PBKS : போட்டி நடக்குமா?

இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ள KKR, PBKS அணிகள் இடையிலான போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மழை காரணமாக இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன்ஸில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஆடுகளமும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இரவு 8 மணிக்கு மேல் 90% மழைக்கு வாய்ப்புள்ளதாம். போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.


