News April 4, 2025
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, இன்று (ஏப்.4) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 10ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 4, 2025
EPFO பணம் எடுப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது…!

EPFO பணத்தை முன்கூட்டியே எடுக்கும் நடைமுறையில் இருந்த 2 சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, பணம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கில் இருந்து பணம் எடுக்கும் செயல்முறையின்போது, இனி காசோலை பிரதியோ வங்கி பாஸ்புக்கின் நகலையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல், வங்கிக் கணக்கு விவரங்களை UAN உடன் இணைப்பதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 4, 2025
₹17.8 லட்சம் கோடியை இழந்த உலக பணக்காரர்கள்

ஏறக்குறைய ஒரு வர்த்தக போரையே தொடங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரது புதிய வரிவிதிப்பு அமலான முதல் நாளே, உலக பணக்காரர்கள் விழிபிதுங்கியுள்ளனர். இன்று மட்டும் ₹17.8 லட்சம் கோடியை அவர்கள் இழந்துள்ளனர். இதில், முக்கியமாக மார்க் ஜுக்கர்பெர்க் ₹1.53 லட்சம் கோடியும், ஜெஃப் பெசோஸ் ₹1.36 லட்சம் கோடியையும் எலான் மஸ்க் ₹94 ஆயிரம் கோடியையும் இழந்துள்ளனர். இன்னும் என்னென்ன நடக்குமோ?
News April 4, 2025
குழந்தையை கடித்துக் குதறிய நாய்

ஓசூரில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்துள்ள அக்குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தும் தெருநாய்கள் தொல்லையில் இருந்து முதல்வர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.