News October 21, 2025

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இங்கு விடுமுறை

image

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News January 21, 2026

அதிமுகவிடம் ’பெரிதாக’ எதிர்பார்க்கும் தேமுதிக

image

கடலூர் மாநாட்டை சுட்டிக்காட்டி அதிமுகவிடம் 10 சட்டமன்ற தொகுதி, 1 ராஜ்யசபா சீட், 1 மத்திய இணை அமைச்சர் பதவி வேண்டும் என பெரிய டிமாண்டை தேமுதிக வைத்துள்ளதாம். இதனைக்கேட்டு ஷாக்கான அதிமுக தரப்பு, தொகுதிகள் ஓகே, ஆனால் மத்திய அமைச்சர் பதவிக்கு நாங்கள் எப்படி கேரண்டி கொடுப்பது என பாஜகவிடம் பேசும்படி அறிவுறுத்தியுள்ளதாம். ஆக தை பிறந்தாலும் தேமுதிகவுக்கு இன்னும் வழி பிறக்கவில்லை போல!

News January 21, 2026

கிரிக்கெட் களத்தில் கால்பதிக்கும் உசைன் போல்ட்?

image

8 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட் அணியில் இருந்து அழைப்பு வந்தால், உடனே தயாராகிவிடுவேன் என கூறி இருக்கிறார். சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என ஆசைப்பட்ட போல்ட், தற்போது உலகின் வேகமான ஓட்டப்பந்தய வீரராக உள்ளார். இப்போ அவர் எவ்வளோ ஸ்பீடில் பவுலிங் போடுவாரு?

News January 21, 2026

புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

image

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!