News October 25, 2024
ரேஷன் கடைகளுக்கு நவ.16ல் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி, அக். 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அத்துறையின் அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருந்தார். இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக நவ. 16ம் தேதி (சனிக்கிழமை) அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
News January 16, 2026
வெள்ளி விலை இன்று ₹4,000 குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.16) <<18869879>>சவரனுக்கு ₹480<<>> குறைந்தது போல், வெள்ளியும் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹306-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.


