News January 21, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விடுமுறை

image

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நாளான பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் சிரமமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள் மக்களே.

Similar News

News March 7, 2026

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டுகிறாரா விஜய்?

image

ஆரம்பத்தில் தவெகவில் All in All-ஆக வலம் வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். இடையில் இவர்மீது ஜானுக்கும், ஆதவுக்கும் அதிருப்தி அதிகரித்ததாக பேசப்பட்டது. எனவே ஆனந்த் குறித்து இருவரும் விஜய்யிடம் பலமுறை புகார் வைத்தனராம். போதாத குறைக்கு ஆனந்தின் மேடைபேச்சுகளும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளானதால் விஜய் மொத்தமாக ஆனந்தை ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தவெக மேடைகளில் பேசுவதில்லை என்கின்றனர்.

News March 7, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு!

image

கடந்த 5 நாள்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம், இன்று திடீரென உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹15,050-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹720 அதிகரித்து ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ₹290-க்கு விற்பனையாகிறது.

News March 7, 2026

நயினார் மீது கே.பி.ராமலிங்கம் அதிருப்தி

image

சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவில் உள்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. நேற்று மாலை தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்த போட்டோவை நயினார் தனது X-ல் பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழ், ஆன்மிகத்தில் ஈடுபாடு தேவைதான்; அதேநேரத்தில் இயக்கத் தோழர்களின் நலனிலும் அக்கறை காட்டுவது தேர்தல் நேரத்தில் அவசியம் என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கமெண்ட் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!