News August 26, 2025
விடுமுறை… இன்று மதியமே ரெடியா இருங்க மக்களே

முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, அரசு சார்பில் இன்று முதல் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று மதியத்திற்கு மேல் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், தி.மலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் தளங்கள் இருக்கும் ஊர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன.
Similar News
News August 26, 2025
ஓஹோ.. இதுதான் விநாயகர் சதுர்த்தியின் கதையா!

மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரம் பெற்றிருந்த கஜமுகாசுரனை விநாயகர் ஆவணி மாத சதுர்த்தி தினத்தில் வதம் செய்தார். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் ஒன்றுகூட தடை இருந்த நிலையில், மக்களை திரட்ட எண்ணிய பாலகங்காதர திலகர், 1893-ல் இந்த பண்டிகையை சமூக நிகழ்வாக மாற்றி, இன்றைய கொண்டாடத்திற்கான வடிவத்தை கொடுத்தார்.
News August 26, 2025
PM மோடியின் தீபாவளி பரிசு… ₹1 லட்சம் Gift?

தீபாவளி பரிசாக GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படுமென PM மோடி அறிவித்திருந்தார். தற்போது, புதிய கார்களுக்கு 28% – 49% வரை வரி (₹10 லட்சத்துக்கு கார் வாங்கினால் ₹2.90 லட்சம் வரி) விதிக்கப்படுகிறது. ஆனால் GST வரி சீர்திருத்தங்களால் 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. இதனால், ₹1 லட்சம் வரை வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸுக்கான GST வரியும் குறைய வாய்ப்புள்ளது.
News August 26, 2025
பொது அறிவு வினா- விடை!

1. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
2. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. பெண்களை முதல்முதலில் காவல்துறையில் சேர்த்த நாடு எது?
4. டேபிள் டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் என்ன?
5. இரட்டைப் புலவர்களின் பெயர் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.