News March 15, 2025
சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. 4 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.
Similar News
News March 15, 2025
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 45,661.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிய வசதியாக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்வது, அதிக விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
News March 15, 2025
ஸ்ரீலீலா பட புரோமோஷனில் பங்கேற்கும் டேவிட் வார்னர்

தான் கேமியோ ரோலில் நடித்த ராபின்ஹுட் படத்தின் புரோமோஷனுக்காக, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஹைதராபாத் வருகிறார். வெங்கி குடுமுலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீலீலா, நிதின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் 22ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் டேவிட் வார்னர் பங்கேற்க உள்ளார்.
News March 15, 2025
பெண்களே.. நாட்டுக்கோழி பண்ணை அமைக்கணுமா?

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.