News August 3, 2024
நாட்டு மக்களுக்கு அமித் ஷா அழைப்பு

மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில், தேசியக் கொடியை ஏற்றுமாறு, அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினம், வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மூவர்ணக் கொடியை, ஆகஸ்ட் 9-15 வரை அனைவரது வீடுகளிலும் ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், தேசியக் கொடி முன்பு செல்ஃபி எடுத்து அதனை <
Similar News
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
News November 28, 2025
அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


