News January 7, 2025
HMPV தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது

நேற்றுவரை 7 குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடகாவின் ஷிவமோகாவில் 6 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 2 வயதுக்கு உள்பட்ட இக்குழந்தைகள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிவிட்டனர். பெங்களூருவில் நேற்று 2 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பே, இச்சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Similar News
News January 15, 2026
EPS-யிடம் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிய பாஜக

தேமுதிக மற்றும் பல சிறிய கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்கும் பொறுப்பை EPS-யிடம் பாஜக கொடுத்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகளின் தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிக தொகுதிகளை கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சிறிய கட்சிகளின் பலம், தலைவர்களின் நெளிவு, சுளிவுகள் EPS-க்கு நன்றாக தெரியும் என்பதாலும் அவரிடம் முழுப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News January 15, 2026
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல், வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள், மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துகள் *மங்களம் பொங்கட்டும், மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும், எண்ணியது ஈடேற.. தைப்பொங்கல் வாழ்த்துகள் *தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்கட்டும்.
News January 15, 2026
ELECTION: 200 தொகுதிகளில் திமுக போட்டி?

தவெகவை கைகாட்டி ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்டு வருகிறது. ஆனால், பங்கு கொடுக்க முடியாது என பிடிவாதத்தில் இருக்கும் திமுக, கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், அதற்கு மாற்று வியூகத்தை வகுத்துள்ளதாம். தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 20-ம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாம்.


