News April 24, 2025
T20 கிரிக்கெட்டில் ஹிட்மேனின் அசாத்திய சாதனை!

T20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். அவர், 456 மேட்சுகளில் இந்த சரித்திர சாதனையை எட்டியுள்ளார். இதற்கு முன்னர், விராட் கோலியும் T20-ல் 12,000 ரன்களை அடித்து இருக்கிறார். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக, 12,000 ரன்களை அடித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் ரோஹித்தை சாரும். உங்களுக்கு பிடிச்ச ரோஹித் இன்னிங்ஸ் எது?
Similar News
News April 24, 2025
‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ விண்ணப்பம் தொடங்கியது!

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் 2025-2026 கல்வியாண்டில் முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹354-ஐ ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். மேலும், யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் படிப்புகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள <
News April 24, 2025
BREAKING: சட்டப்பேரவைக்கு செல்லாத செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்(SC) 4 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவர் இன்று சட்டப்பேரவைக்கு செல்லவில்லை. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும் என்பது குறித்து 4 நாள்களில் முடிவெடுக்க SC கெடு விதித்திருந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
News April 24, 2025
பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.