News October 25, 2025
Hitman அரைசதம்!

இந்திய அணியின் ஓபனர் Hitman ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 2-வது ODI-யிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ODI-யில் இது ரோஹித் சர்மாவுக்கு 60-வது அரைசதமாகும். இந்திய அணி தற்போது வரை 20.1 ஓவர்களில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.
Similar News
News January 21, 2026
WhatsApp-ல் ‘Storage Full’ பிரச்னையா?

WhatsApp-ல் தானாகவே பல தரவுகள் டவுன்லோடாகி, ‘Storage Full’ பிரச்னையை பலரும் சந்திக்கிறோம். இது எரிச்சலான விஷயமாகும். இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. WhatsApp-ல் வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து அதில், ‘Settings’-ஐ தேர்வு செய்யவும். அதில், ‘Chats’-ஐ கிளிக் செய்து, Media Visibility-ஐ Off செய்யவும். இது போனின் Storage பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.
News January 21, 2026
திமுகவில் இணைந்தார்.. விஜய்க்கு அதிர்ச்சி

சற்று நேரத்திற்கு முன் ஒரத்தநாடு MLA பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம், தனது மகனோடு CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவருடைய இந்த முடிவுக்கு பின்னணியில் செந்தில் பாலாஜிதான் மூளையாக இருந்ததாக பேசப்படுகிறது. பல நாள்களாக இவர் தவெகவில் இணையப்போகிறார் என பேசப்பட்ட நிலையில், தடாலடியாக திமுகவில் இணைந்துள்ளதால் விஜய் தரப்புக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
News January 21, 2026
தமிழகத்தில் 377 பேர் பலி.. சோகம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 377 பேர் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சேலத்தில் 132 பேர், தருமபுரி – 18, ஜோலார்பேட்டை – 125, காட்பாடி – 82, ஒசூர் – 20 என மொத்தம் 377 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதேநேரம், ரயில்வே கிராஸிங் & தண்டவாளங்கள் அருகே உள்ள கிராமங்களில் ரயில்வே தரப்பில் விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


