News April 20, 2025
ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு

கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருந்தது. எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை.
Similar News
News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
News August 19, 2025
கணவர்களே பொண்டாட்டி பேச்சை கேளுங்க

மனைவியின் சொல் பேச்சை கேட்கும் கணவர்களை ‘பொண்டாட்டி தாசன்’ என்று பலரும் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான், வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி பெறுவதாக Harvard Business School நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர்களின் சிக்கல்களை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து கொடுப்பதும் மனைவிகள் தானாம்.
News August 19, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪டி.ஆர்.பாலுவின் மனைவி <<17450853>>ரேணுகாதேவி <<>>காலமானார்
✪ஆம்புலன்ஸ் <<17451121>>விவகாரம்<<>>.. EPS-ஐ எச்சரித்த அமைச்சர்
✪ரத்தாகும் <<17448881>>ஜான் <<>>பாண்டியனின் கட்சி அங்கிகாரம்
✪ஜெலென்ஸ்கி- <<17448708>>புடின் <<>>சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் டிரம்ப்
✪<<17450745>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹1,680 குறைவு ✪ஆசிய கோப்பைக்கான <<17449797>>இந்திய <<>>அணி.. இன்று அறிவிப்பு