News November 24, 2024

INDIA கூட்டணிக்கு வரலாற்று வெற்றி: ஸ்டாலின்

image

ஜார்க்கண்டில் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற ஹேமந்த் சோரனுக்கும், INDIA கூட்டணிக்கும் CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் என கடந்த 5 ஆண்டுகளாக பல தடைகளை பாஜக உருவாக்கினாலும், அதை ஹேமந்த் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக அவர் புகழ்ந்துள்ளார். மேலும், மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி இது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

அரியலூர்: கருத்தடை செய்தால் ஊக்கத்தொகை

image

அரியலூர் மாவட்டத்தில், ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் அரசின் சார்பில் ஊக்க தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

image

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.

News December 4, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

image

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!