News August 21, 2025
விஜய்யை விட இவருடைய தாக்கம் பெருசு: தமிழிசை

மதுரையில் தவெகவின் 2வது மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள தமிழிசை விஜய்யின் மாநாட்டை விட நாளை அமித்ஷா பங்கேற்கவுள்ள நெல்லை பூத் கமிட்டி மாநாடு தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும், அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர் எனவும், விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
இவரல்லவா கலெக்டர்!

ஏழைகளுக்காக கலெக்டர் எடுத்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளது. ராஜஸ்தானின், ராஜஸ்மந்த் மாவட்ட கலெக்டர் அருண் குமார், மாவட்டத்தின் அனைத்து ஏழைகளுக்கும் ரேஷன், விதவைகளுக்கு ஓய்வூதியம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் வரை சம்பளம் வாங்க மாட்டேன் என அறிவித்துள்ளார். ‘உத்தரவிட்டாச்சு வேலை முடிஞ்சுது’ என இல்லாமல், அதிகாரிகள் திட்டத்திற்கான பணிகளை விரைந்து முடிக்க இம்முடிவை எடுத்துள்ளாராம்.
News January 19, 2026
UAE அதிபரை நேரில் சென்று வரவேற்ற PM மோடி

ஒருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த UAE அதிபரை டெல்லி ஏர்போர்ட்டிற்கு நேரில் சென்று PM மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இந்த போட்டோக்களை X-ல் பகிர்ந்துள்ள அவர், UAE அதிபரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வருகை, வலுவான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நட்புறவிற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. எங்கள் கலந்துரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
News January 19, 2026
நாளை காங்., செயற்குழு கூட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 2026 தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. தேசிய தலைவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


