News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
மக்களுடனே தவெக கூட்டணி: அருண்ராஜ்

தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், தவெக கூட்டணிக்கு இதுவரை எந்த முக்கிய கட்சிகளும் வரவில்லை. இந்நிலையில், இன்னும் கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் இருக்கும் OPS-ம், தேமுதிகவும் கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறதா என அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தவெக மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றிபெறும் என்றார். இதன்மூலம் தவெக தேர்தலை தனித்தே சந்திக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.
News January 24, 2026
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுவா?

வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குநர் பிராங்கிளின் ஜேகப் கதையில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் Writer படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜேகப். வழக்கமாக ஜாலியான ஸ்கிரிப்டுகளில் நடிக்கும் பிரதீப், சீரியஸான கதைகளை உருவாக்கும் இயக்குநரோடு கமிட்டாகி இருப்பதாக கூறப்படும் தகவல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
News January 24, 2026
பாதாளச் சாக்கடையில் கொசுவலை: மேயர் விளக்கம்

சென்னையின் சில இடங்களில் பாதாளச் சாக்கடை மூடியின் அடிப்பகுதியில் <<18935030>>கொசுவலை<<>> போர்த்தியது விமர்சனத்திற்கு உள்ளானது. இது கொசுக்களுக்காக வைக்கப்பட்டது அல்ல என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஒரு கவுன்சிலரின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டது என்றும், மாநகராட்சியின் முன்னெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார். இதை இவ்வளவு சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரியா தெரிவித்தார்.


