News April 19, 2025

வங்கதேசத்தில் இந்து தலைவர் அடித்து கொலை

image

பங்களாதேஷ் பூஜா உத்ஜபான் பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பாபேஷ் சந்திரா ராய் (58) அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த அவரை சிலர் கடத்திச் சென்று கொலை செய்ததாக ராயின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கொலை நிகழ்ந்துள்ளது.

Similar News

News December 6, 2025

ஆண்களே, என்றும் இளமையாக இருக்கணுமா? இதோ TIPS!

image

ஆண்களே, Skin Care செய்ய நேரம் இல்லையா? கவலை வேண்டாம். இந்த Skincare-ஐ செய்ய நீங்க வெறும் 5 நிமிடங்களை செலவிட்டால் போதும். ➤Facewash பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள் ➤5 நிமிடங்கள் கழித்து Moisturizer பயன்படுத்துவது அவசியம் ➤வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் Sunscreen தடவுங்கள். இதை செய்வதால் முகத்தில் சுருக்கம் விழாது, என்றென்றும் இளமையாக தெரிவீர்கள். சக ஆண்களுக்கு SHARE.

News December 6, 2025

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசிரியருக்கு அதிரடி தண்டனை

image

குன்னூரில் கடந்த 2023-ல் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இசைப் பயிற்சிக்கு சென்ற மாணவியை, ஆசிரியர் பிரசாந்த் ரேப் செய்த நிலையில், மாணவி கர்ப்பமானார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹2 லட்சம் நிவாரணம் அளிக்கவும் TN அரசுக்கு உத்தரவிட்டது.

News December 6, 2025

அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

image

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!