News February 23, 2025

மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

image

சென்னையில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் இந்தி கவிதையை சரியாக சொல்லாததால், அவரை இந்தி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தினாலே இப்ப பிரச்னை தான்!

Similar News

News February 23, 2025

5ஆவது கணவரை விவாகரத்து செய்தார் ஜெனிபர் லோபஸ்

image

உலக புகழ்பெற்ற அனகோண்டா பட நாயகியும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பேட்மேன் பட நாயகன் பென் அப்லெக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து கோரி ஜெனிபர் தொடர்ந்த வழக்கில், லாஸ் ஏஞ்செல்ஸ் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து 2 பேரும் மற்ற செட்டில்மென்ட்களை வெளியே பேசி தீர்வு காணவுள்ளனர். பென் அப்லெக், ஜெனிபரின் 5ஆவது கணவர். அப்லெக்கிற்கு ஜெனிபர் 2ஆவது மனைவி ஆவார்.

News February 23, 2025

சிம் கார்டு வாங்குவது இனி ஈஸி கிடையாது

image

சிம் கார்டுகளை முன்புபோல இனி எளிதாக வாங்கிவிட முடியாது. சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டை அரசு கட்டாயமாக்கியதில் இருந்து அதற்கான நடவடிக்கைகளில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே, Voter ID, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் கொண்டு இனி சிம் கார்டு வாங்க முடியாது. குற்றச்செயல்களை தடுப்பதற்காக ஆதாரை மையப்படுத்திய பயோ-மெட்ரிக் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

டாஸ்மாக்கில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு

image

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக், எலைட் கடைகளில் கடந்த 20 நாட்களாக மது வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடை திறந்ததும் 2 மணி நேரத்தில் வருவோருக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனால் எஞ்சியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். QR கோடு முறையில் மதுபானங்கள் சப்ளை, மதுபான ஆலைகளில் இருந்து சப்ளை குறைந்திருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!