News August 19, 2024
கருணாநிதி நாணயத்தில் இந்தி: ஸ்டாலின் பதிலடி

அண்ணா, கருணாநிதி நாணயத்தில் மட்டும் தான் தமிழ் இடம்பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கருணாநிதி நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ வாசகம் உள்ளதாக கூறிய அவர், அனைத்து தலைவர்களுக்குமான நாணயத்தில் இந்தி, இங்கிலீஷ் மட்டுமே இருக்கும் என்றார். இதை புரிந்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித்தலைவர் தமிழகத்திற்கு வாய்த்திருப்பதாகவும், அவருக்கு அரசியலும் தெரியவில்லை; அறிவும் இல்லை எனவும் விமர்சித்தார்.
Similar News
News March 27, 2026
கும்பகோணம் தொகுதி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கும்பகோணம் தொகுதியில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் சார்பாக கும்பகோணம் தொகுதி வேட்பாளராக தமாகா மாநில செயலாளர் எம்.கே.ஆர் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
News March 27, 2026
விஜய் – த்ரிஷா.. வைரலாகும் ஆர்த்தியின் பதிவு

ஒரு மனைவிக்கான அனுதாபம் அவரது கணவரின் மார்க்கெட் வேல்யூவை பொறுத்ததா என்று ஆர்த்தி தனது இன்ஸ்டா பதிவில் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ரவி மோகன் – கெனிஷா விவகாரம் வெடித்தபோது தனக்கு பெரிதாக ஆதரவு இல்லை, குரல்கள் எழவில்லை. ஆனால், விஜய் – சங்கீதா, த்ரிஷா விவகாரத்தில் சங்கீதாவுக்கு பேராதரவு கிடைத்தது குறித்து அவர் மறைமுகமாக இப்படி சொல்வதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 27, 2026
தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியானது

NDA கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை – கார்த்திகேயன், ஈரோடு மேற்கு – யுவராஜா, ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர், கும்பகோணம் – அசோக்குமார், கிள்ளியூர் – நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த 5 தொகுதிகளில் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>


