News April 22, 2025
ஹிந்தி திணிப்பு.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கேள்வி

மகாராஷ்டிரா ஹிந்தி திணிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதனை திரும்பப் பெற்றது. இதனை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பாஜக ஆளும் மாநிலத்திலேயே ஹிந்தி கட்டாயமில்லை எனக் கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 22, 2025
ஏப்ரல் 22: வரலாற்றில் இன்று

▶ உலக புவி நாள். ▶ 1870 – புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த நாள். ▶ 1962 – எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள். ▶ 1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டனர். ▶ 2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. ▶ 2014 – காங்கோவில் ரயில் விபத்து ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்தனர்.
News April 22, 2025
கூட்டம் சேரலயாம்.. காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட்

கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
News April 22, 2025
மோடி சிறந்த தலைவர்: USA துணை அதிபர் புகழாரம்

PM மோடி சிறந்த தலைவர் என USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜே.டி.வான்ஸை வரவேற்ற PM மோடி, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு, மோடியை சந்தித்தது கவுரவம் என்றும், அவர் சிறந்த தலைவர் எனவும் ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.