News January 16, 2025
மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்

அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. இதனை அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகெங்கும் உள்ள பிரபல நிறுவனங்கள் குறித்து ரிப்போர்ட் வெளியிட்டு வந்தது. இந்நிலையில், டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக, தனது ஆராய்ச்சி யோசனைகள் தீர்ந்துவிட்டதாகக் கூறி, நாதன் ஓய்வை அறிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
இளமை திரும்புதே… பேட்ட வேலனுடன் மங்களம்!

ரஜினியை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் சந்தித்தார் சிம்ரன். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், சில சந்திப்புகள் பொன்னானவை என்றும், சூப்பர் ஸ்டாருடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சி எனவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ‘கூலி’, ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இனிமையாக்கி உள்ளதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். பேட்ட ரஜினி, சிம்ரன் காம்போ யாருக்கெல்லாம் பிடிக்கும்?
News August 23, 2025
வாரத்தில் ஒருநாள் சோம்பேறியா இருங்க!

இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.
News August 23, 2025
இது நடந்தால் CM ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயலும் நிலையில், CM-களின் கிரிமினல் வழக்குகளை ADR வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி முதலிடம்(89), TN CM ஸ்டாலின் 2-வது இடம்(47), AP CM சந்திரபாபு 3-வது இடம்(19) வகிக்கின்றனர். மேலும், BJP ஆளும் MH-ல் CM பட்னவிஸ் 4 வழக்குகளுடன் 6-வது, KL CM பினராயி 8-வது இடத்தில் உள்ளனர். இந்த மசோதா சட்டமானால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்.