News April 8, 2025
KKR அணிக்கு இமாலய இலக்கு

KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் LSG அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம் & மார்ஷ் அபாரமாக விளையாடி, முறையே 47 & 81 ரன்கள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 36 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் செய்யுமா கொல்கத்தா அணி?
Similar News
News April 17, 2025
தீரன் சின்னமலை பிறந்தநாள்: இபிஎஸ் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News April 17, 2025
10 நாள்களில் சவரனுக்கு ₹5,560 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை <<16125169>>இன்று<<>> கிராமுக்கு ₹105 அதிகரித்துள்ளது. கடந்த 8-ம் தேதி 1 கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையானது. கடந்த 10 நாள்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹8,920க்கும், சவரன் ₹71,360க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வரிப்போர் காரணமாக வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News April 17, 2025
Pant LSG-ல இருக்காரு.. போட்டோ போட்டு கலாய்த்த 96 நடிகை!

வர்ஷா பொல்லம்மா ரீசண்ட் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. கறுப்பு கலர் மினி கவுன் ஒன்றில் க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்ததை விட, அந்த போஸ்டுக்கு அவர் கொடுத்திருந்த கேப்ஷன் தான் செம வைரல்.‘Pant எங்கன்னு முட்டாள்தனமா கேக்காதீங்க.. அவர் LSG-ல இருக்காரு’ என வர்ஷா மென்ஷன் பண்ண, நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர். ‘96’, ‘பிகில்’ போன்ற தமிழ் படங்களில் வர்ஷா நடித்துள்ளார்.