News August 28, 2024
காலராவை தடுக்கும் ‘ஹில்கால்’

காலராவை தடுப்பதற்கான ‘ஹில்கால்’ என்ற புதிய மருந்தை, பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாய் வழியாக செலுத்தும் இந்த தடுப்பு மருந்தை, 3 கட்டமாக சோதித்து வெற்றி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ‘ஹில்கால்’ மருந்து உற்பத்திக்கு இந்திய DGCI அனுமதி வழங்கியுள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 10 கோடி டோஸ் காலரா தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 16, 2025
BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

SRH ஆலோசகராக VVS லக்ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
News August 16, 2025
கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 – 25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு எழுதியவர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.