News June 20, 2024

மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை: 26இல் தீர்ப்பு

image

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து 9 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின் மத உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வரும் 26ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

Similar News

News September 11, 2025

கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

நாளை மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று இரவு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News September 11, 2025

விநோத உணவுகள்: நீங்க ட்ரை பண்ணுவீங்களா?

image

உலகில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பிரத்யேக பாரம்பரிய உணவு முறைகள் உள்ளன. புவியியல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு மக்களிடையே உணவு முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகிறது. அப்படி, ஒரு சாரார் விரும்பி உண்ணும் உணவு, இன்னொரு சாராருக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், வியட்நாமின் விநோத உணவுகளை மேலே பட்டியலிட்டுள்ளோம். அதை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்

News September 11, 2025

எனக்கு எதிராக பணம் கொடுத்து பிரசாரம்: அமைச்சர்

image

தனக்கு எதிராக சோஷியல் மீடியாவில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். <<17545460>>எத்தனால் கலப்பு<<>>(E20) பெட்ரோலை மத்திய அரசு ஊக்குவிக்க, கட்கரியின் மகன் எத்தனால் பிசினஸில் இருப்பதே காரணம் என்று சொல்லப்படுவதையே அவர் இப்படி குறிப்பிடுகிறார். E20 பெட்ரோல் பாதுகாப்பானது என SC-யும், வாகன நிறுவனங்களும் உறுதிசெய்த பின்பும், தான் குறிவைக்கப் படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!