News October 4, 2025

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்தின் சிறப்புகள்

image

2026 FIFA உலகக் கோப்பை தொடருக்கான கால்பந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. adidas நிறுவனம் தயாரித்துள்ள இப்பந்தில் 3 நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வண்ணங்கள் தொடரை நடத்தும் கனடா (சிவப்பு), பச்சை (மெக்ஸிகோ), நீலம் (USA) ஆகிய நாடுகளை பிரதிபலிக்கின்றன. ‘Trionda’ வகையில் இப்பந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘3 அலைகள்’ என பொருள். இத்தொடர் 2026, ஜூன் 11-ல் தொடங்குகின்றன.

Similar News

News October 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 478 ▶குறள்: ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. ▶பொருள்: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

News October 4, 2025

வெற்றிமாறன் – சிம்பு பட முன்னோட்டம் அப்டேட்

image

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட காட்சியை விரைவில் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அறிவித்துள்ளார். இதற்கான சென்சார் பணிகள் நிறைவுற்ற பின்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் ‘இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என X தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

News October 4, 2025

டாப் 50-யில் சென்னை உணவகங்கள்

image

2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் – 13, பெங்களூருவில் – 9, டெல்லியில் – 9, கோவாவில் – 8, சென்னையில் – 5, கொல்கத்தாவில் – 3 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரபலமான ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள அவர்தனா உணவகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்த உணவகம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!